திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பல்வேறு விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்தும் சாலை சரி செய்யப்படுமா?