சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தம் மிகவும் பயங்கரமாக காட்சியளிக்கிறது. பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்ட் மேடை பெயர்ந்தும், கற்கள் சிதைந்தும் காணப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்கள் தடுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கூடிய விரைவில் சிதைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.