சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பிணவறைக்கு செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீர் தேங்கி இருப்பதால் அந்த பாதையில் நடப்பதற்கும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து துர்நாற்றம் வீசும் பாதையை சரி செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் வழி செய்ய வேண்டும்.