சென்னை மேனம்பேடு சாலை கச்சனாங்குப்பம் கண்ணியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்காணிப்பு கேமரா உள்ளது. பெயரளவில் மட்டுமே கண்காணிப்பு கேமரா, இது செயல் இழந்து பல நாட்கள் ஆகிறது. மேலும் கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது. கேமராவை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?