செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், அகரம் பகுதிக்குட்பட்ட கஸ்பாபுரம் கிராமத்தில் உள்ள அண்ணா தெருவில் கடந்த 40 ஆண்டுகளாகவே சீரான சாலை வசதி இல்லை. இந்த சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலை வசதி செய்து தரவும், சாலையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.