செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து மேலக்கோட்டையூர் செல்வதற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்லும் மக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அதிகமான மக்கள் பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே மேலக்கோட்டையூர் செல்வதற்கு அதிகமான பஸ்களை இயக்கிட வழி செய்ய வேண்டும்.