புதிய மின்கம்பம் கிடைத்தது

Update: 2022-10-16 14:04 GMT

திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் கிராமம் விவேகானந்தர் சாலையில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு திடல் அருகே மின்கம்பம் பழுதடைந்த நிலையில் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் மின்கம்பம் மாற்றப்பட்டு, புதிய மின்கம்பம் பொறுத்தப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்