நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-10-16 14:02 GMT

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் 2-வது இணைப்பு சாலையில் காலை மற்று மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். சமீபத்தில் இந்த சாலையில், நடைபயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் சென்டர் மீடியம் நடைபயிற்சி மேடை போடப்பட்டது. இந்த நடைபயிற்சி மேடை தற்போது பொதுமக்களுக்கு பயன்படாமல், ஆட்டோக்கள், வேன், கார் போன்றவை நிற்க பயன்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு நடைபயிற்சி மேடையை மீட்டு தர வேண்டும்.

மேலும் செய்திகள்