சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள நாச்சரம்மாள் லேன் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவில் தான் பிரச்சினை என்றாலும் தற்போது பகலிலும் அவைகளின் தொல்லை தாங்க முடியவில்லை. சாலைகளில் செல்வதற்கே பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மாநகராட்சி கவனித்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.