காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பஜாரில் உள்ள குப்பைதொட்டிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கியுள்ள குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் தினந்தோறும் அகற்றப்பட்டால் அப்பகுதி பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும்.