காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.