செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி மேற்குப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக சம்பந்தபட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.