செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சங்கு மேடு சந்திப்பில் உள்ள கால்வாய் பகுதி உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு கால்வாயை சரி செய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.