திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் இரயில்வே கேட்டில் இருந்து செல்லும் சாலை சுமார் 200 மீட்டர் அளவுக்கு குறுகிய நிலையில் உள்ளது. இதனால் சாலையின் 2 பக்கஙக்ளிலும் வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியவில்லை. சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கத்திற்கு வழி செய்ய வேண்டும்.