காஞ்சீபுரம் அடுத்த காலூர் கிராமத்தில் வயல் வெளியில் உள்ள மின்கம்பத்தின் மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. கைகளால் எளிதில் தொட்டுவிடும் நிலையில் இருக்கும் மின்சார வயர்களால் காலநடைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.