திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட நூம்பல் பகுதிக்கு சொந்தமான சுடுகாடு வேலப்பன்சாவடி பள்ளி குப்பம் சாலையில் அமைந்திருந்தது. இப்போது புதிதாக மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக நூம்பல் சுடுகாட்டுக்கு சொந்தமான நிலத்தை நெடுஞ்சாலை துறை எடுத்துள்ளது. இதனால் எங்கள் பகுதியில் யாராவது இறந்துவிட்டால் அடக்கம் செய்வதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகிறோம். உடனடியாக அரசு தலையிட்டு சுடுகாட்டுக்கு தகுந்த இடம் கொடுக்கும்படி ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.