திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஜனப்பன் சத்திரம், திருப்பதி செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த மழைநீர் அகற்றப்படாமலே உள்ளது. மேலும் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் நடந்து செல்பவர்கள் மீது மழைநீரை வாரி இரைத்தவாறு செல்கின்றன. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வழி செய்ய வேண்டும்.