ஆபத்தான அறிவிப்பு பலகை

Update: 2022-10-09 14:15 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகே உள்ள கட்டிடத்தின் மீது முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பு பலகை இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக இந்த அறிவிப்பு பலகை சாய்ந்தவாறு தொங்கியபடி அபாயகரமாக காட்சியளிக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் நிலையில் இருக்கும் பலகையை யாரும் சரிசெய்யவில்லை. நடந்து செல்லும் பொதுமக்கள் மீது திடீரென பலகை விழுந்தால் என்னாவது? ஆஸ்பத்திரி நிர்வாகம் கவனிக்குமா?

மேலும் செய்திகள்