செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலும் இந்த படிகட்டுகள் இயக்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் தினமும் ரெயிலில் பயணம் செய்யும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் இந்த பிரச்சினையை சரி செய்யுமா?