காஞ்சீபுரம் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி, கொசு தொல்லையால் மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.