கிடப்பில் கிடக்கும் பாலம்

Update: 2022-10-05 14:51 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை நடுவே மேம்பாலம் அமைப்பதற்கான பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்ட பணி அப்படியே உள்ளது. சாலை நடுவே இரும்பு தகடுகள் அடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்