திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் 15 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை விரைந்து புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.