சென்னை பிராட்வே பஸ் நிலைய சாலைகள் சிதைந்து குண்டும் குழியுமாக பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாநகர பேருந்துகள் சாலை பள்ளங்களில் ஏறி இறங்குவதால் பஸ்களின் டயர்கள் சேதமடைகிறது மற்றும் எரிபொருளும் அதிகமாக செலவாகிறது. இதனால் சில நேரங்களில் பயணிகள் அச்சமடைந்து விபத்து ஏற்பட்டது போல் கூச்சலிடுவது வாடிக்கையாக உள்ளது. எனவே உடனடியாக பிராட்வே பஸ் நிலைய சாலைகளை மழை காலத்திற்குள் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.