சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் ஏரிக்கரை தெருவில் மின்கம்பத்தின் வயர்கள் தொய்வடைந்து தொங்கிய நிலையில் இருந்து வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் வயர்களை இழுத்துச்செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலங்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், மின்வயர்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.