சென்னை மணப்பாக்கம், மேட்டுக்காலணியில் மழைநீர் வடிகால்வாய் வேலை மிகவும் மந்த நிலையில் நடைபெறுகிறது. குறிப்பாக, காமராஜர் தெரு மற்றும் நேரு தெரு இணையும் இடத்தில், நேரு தெருவிலிருந்து கொண்டுவந்த கால்வாயை வேறு எந்த கால்வாயுடனும் இணைக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டதால், கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.