சென்னை தண்டலம் அண்ணா நகர் தாஸ் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பம், பழுதடைந்த நிலையில் உள்ளது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மின்கம்பத்தை மாற்றி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி-க்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.