திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியை கடக்கும் போது எல்லாம் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குப்பை கிடங்கை சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற மாசு ஏற்படாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றினால், உபயோகமாக இருக்கும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை களப்பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?