சென்னை வேளிச்சேரி நேரு நகர் பெரியார் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி பொதுமக்கள் நடமாடும் இடத்தில் ஆபத்தான வகையில் தரையில் கிடக்கிறது. அதன் அருகே குழந்தைகளும் அங்குமிங்கும் விளையாடுவதால் ஆபத்தான நிலை இருந்து வருகிறது. ஆபத்துடன் விளையாட்டு என்பது தொடர்ந்து விடாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.