சென்னை மந்தைவெளிப்பாக்கம் 3-வது டிரஸ்ட் குறுக்குத் தெருவில் நீண்ட நாட்களாக மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இரவுகளில் சாலையிலேயே படுத்துக்கொள்வதால், விபத்துக்கள் ஏற்படுவதுக்கும் வழிவகுக்கிறது. மாடுகளை இவ்வாறு தெருக்களில் அலைய விட்டால் அபராதம் என மாநகராட்சி அறிவித்து இருந்தும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. மாநகராட்சி கவனிக்கிறதா?