காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பட்டூர் பகுதியிலிருந்து பிராட்வே செல்வதற்கு (தடம் எண்53 பி) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் மாங்காடு, பட்டூர் பகுதியிலிருந்து செல்லும் பள்ளி மாணவ, மாணிவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?