செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பஸ் நிறுத்தத்திலிருந்து அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் பாதை மோசமாக உள்ளது. இந்த பாதையில் ஆங்காங்கே பள்ளமும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும், பஸ் ஓட்டுநர்களும் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?