செங்கல்பட்டு மாவட்டம் சிப்காட் ஐ.டி. பார்க்கிலிருந்து சென்னை கொட்டிவாக்கம் செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் ஐ.டி. பார்க்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்ப பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் சிப்காட் பகுதியிலிருந்து கொட்டிவாக்கம் செல்ல நேரடி பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.