செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் வடபாதி அம்பேத்கர் நகர், மெஜஸ்டிக் அவென்யூ, தென்பாதி எம்.ஜி.ஆர். நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும்.