செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் பெரியார் ரோடு 3-வது தெருவும் 4-வது தெருவும் சந்திக்கும் இடத்தில் குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் அந்த பகுதியே அலக்கோலமாக காட்சி தருகிறது. நீண்ட நாட்களாக அகற்றப்படாத குப்பைகளால் சுகாதர சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.