திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரம்பபாக்கம் ரெயில் நிலையம் சந்திப்பில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம் சேதமடைந்த மின் கம்பத்தை சீர் செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.