சீரமைக்கப்படாத பஸ் நிறுத்தம்

Update: 2022-09-30 15:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், இலத்தூர் பகுதியில் உள்ள திருப்பிர கோவில் குக்கிராமத்தில் அமைந்துள்ள பஸ் நிலையம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த பஸ் நிறுத்தமானது பாழடைந்தும் சுவர்கள் சேதமடைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள் இந்த பஸ் நிறுத்தத்துக்குள் நிற்பதே இல்லை. வெயிலோ மழையோ சாலையின் நின்று தான் பயணம் செய்து வருகிறார்கள். எனவே பஸ் நிறுத்தத்தை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்