செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் நீலமங்கலம் ஊராட்சியின் வழியாக குண்ணத்தூர் பகுதிக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அளவுக்கு அதிகமான எடையுடனும், அதிவேகமாகவும் செல்லும் வாகனங்களால் சாலையில் செல்லவே அச்சமாக உள்ளது. இந்த சாலை அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முதியோர்கள் இந்த பாதையில் சென்று வருவதால் கனரக வாகனங்களை வழி மாற்றி தச்சூர் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்