திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி-மாங்காடு செல்லும் பிரதான சாலையோரம் மழை நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சில சமூக விரோதிகளால் பள்ளம் தோணடப்பட்டு கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. மழை காலம் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.