சென்னை அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பின் காரணமாக சாலை சுருங்கி விட்டது. தற்போது கால்வாய் பணியின் காரணமாக போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. சாலை ஓரத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பெயர் பலகைகளால் சாலையில் பயணிக்கவே சிரமமாக உள்ளது. போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?