திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள மின்கம்பம் துருபிடித்து மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பம் சரிந்து கீழே விழுந்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மிக பெரிய விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அபாயகரமான மின்கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.