பெயர் பலகை வேண்டும்

Update: 2022-09-29 15:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடங்களில் நூற்றுக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டு மக்கள் இப்பகுதியில் குடியேறியுள்ளனர்.புதியதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு கதவு எண்கள் கொடுக்கப்படாததால் தபால் மற்றும் கூரியர் டெலிவரி செய்வதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் புதியதாக உருவாகியுள்ள தெருக்களுக்கு பெயர் பலகைகள் வைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.  

மேலும் செய்திகள்