பாலம் சரிசெய்யப்பட வேண்டும்

Update: 2022-09-29 15:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பேட்டை மடுவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி சுற்றுப்புறங்களில் பெய்யும் மழைநீர் இந்தப் பேட்டை பாலத்தின் வழியாக மதுராந்தகம் ஏரிக்கு சென்றடைகிறது. தற்போதய மழையின் காரணமாக இந்த பாலம் சிதிலமடைந்துள்ளது. பாலத்தில் தடுப்புத் தூண்களின்றி குறைவான உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. வெள்ளநீர் பாலத்தின் கொள்ளளவை மீறி ஊருக்குள் பரவலாக செல்கிறது. மேலும், வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும்படி பாலத்தில் விழும் ஆபத்தும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பாலத்தைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.

மேலும் செய்திகள்