செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கிராமம் வழியாக சென்னை - வந்தவாசி மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தசாலையில் எங்கள் கிராமம் அருகே ஒரு வேகத்தடை அமைந்துள்ளது. அதில் இருந்த வெள்ளை நிற கோடுகள் அழிந்துள்ளதால், வேகத்தடை எளிதில் கண்களுக்கு தெரிவதில்லை.அதனால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகி விட்டது. பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.