சென்னை அசோக் நகர் 15-வது அவென்யூவில் மழை நீர் வடிகால்வாய் பணியின் போது கழிவுநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் அந்த இடத்தில் கடந்த 7 நாட்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. கழிவுநீரை அகற்றவும், உடைந்த குழாயை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.