திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளி இடிக்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அரசு மாணவர் விடுதியில் தற்காலிகமாக பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி இடிக்கப்பட்டு சுமார் 6 மாதம் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாணவர்களின் நலன் கருதி விரைவாக பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.