திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பெரிய ஒபுலபுரம் கிராமத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த தடுப்பணை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கோடை காலங்களில் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை கள ஆய்வு செய்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.