திருவள்ளூர் மாவட்டம் ஆலத்தூர் சைதன்யா அவென்யூ பகுதியில் சாலை அமைக்கும் பணி முடிக்கப்படாமல் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு தார் சாலை விரைந்து அமைத்துள்ளனர். இதில் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.