சத்தியமங்கலம் கெஞ்சனூரில் வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக ரோடு போட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு ரோடு தோண்டப்பட்டது. ஆனால் ரோடு போடப்படவில்லை. இதனால் அந்த ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வானகங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே ரோடு போட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.