சென்னை ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜ நகர் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் சுரங்கப்பாதை கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பாதி கட்டி முடிகப்பட்ட சுரங்கப்பாதையானது பாசி படிந்து வீணாகி வருகிறது. எனவே நிறுத்தப்பட்ட பணி மீண்டும் தொடங்கி முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.