காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலிருந்து பிராட்வே, எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு (தடம் எண் : 26 பி) என்னும் நேரடி பஸ் சேவை இயக்கப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா காலத்தில் இந்த பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாங்காடு பகுதியில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் மக்கள் என பலரும் பஸ் வசதி இல்லாமல் பூந்தமல்லி அல்லது குமணன் சாவடி சென்று பஸ் ஏறி வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட '26 பி' பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.